leader eng

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தை  முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடகிழக்கு மாகாண சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போரட்டம் ஆரம்பமாகி, அங்கிருந்து பேரணியாக டிப்போ சந்தியை நோக்கி சென்று, அங்கு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபைக்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டத்தில் கட்சி பேதங்களை கடந்து , அனைத்து அரசியல் கட்சியினரும் , சிவில் சமூகங்கள் , பொது அமைப்புக்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி