பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட சீன் லோவர் பூண்டுலோயா தோட்டத்தில் நேற்றிரவு (16)  ஏற்பட்ட திடீர் தீபரவல் காரணமாக 25 வீடுகள் எரிந்து தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் தீவிபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 வீடுகளை சேர்ந்த 86 பேர் தோட்ட ஆலய மண்டபம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தச் சம்பவத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளான இரு வயோதிபர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இளைஞர்கள் போராடியுள்ள போதிலும் பயனளிக்கவில்லை எனவும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கபட்டதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பவத்தை அறிந்த அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அங்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் உடன் தேவைகளுக்கான வசதிகளும், நிதி உதவியும் செய்து சென்றதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி