இந்தியாவின் மேற்கு வங்கம

மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி. கா் என்ற மிகவும் பழமையான அரசு மருத்துவமனை ஒன்றுள்ளது. இந்த மருத்துவமனையில் இளம்பெண் ஒருவா் பயிற்சி மருத்துவராக இருந்தார். 

அவா் கடந்த 9 ஆம் திகதி இரவு நேர பணியில் ஈடுபட்டார். அன்றைய இரவு மா்ம நபா்களால் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்யப்பட்டார். 
 
அவரது உடலை மீட்டு பொலிஸார் விசாரணை நடத்தியதில் உடலில் காயங்கள் இருந்தமை தொிந்தது. மேலும் பிரேத பாிசோதனையில் பயிற்சி மருத்துவா் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலும் தொியவந்தது.
 
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயிற்சி பெண் மருத்துவாின் கொலையை கண்டித்து மருத்துவ மாணவா்கள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக முதல் அமைச்சர் மம்தா பானா்ஜி, சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இதற்கிடையே பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனை தொடா்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனா்.
 
இந்த வழக்கில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் விசாரணை மற்றும் பிரேத பாிசோதனை அறிக்கையின்படி பயிற்சி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் மருத்துவமனை மற்றும் போலீஸ் வாகனங்கள் சூறையாடப்பட்டன.
 
அரசு மருத்துவமனையில் இரவு நேர பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதுடன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையான பயிற்சி மருத்துவாின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகளின் விசாரணை மந்தமடைந்துள்ளது. எனவே பெண் பயிற்சி மருத்துவாின் கொலையை கண்டித்து நாடு முழுவதும் நாளை 17 ஆம் திகதி  காலை 6 மணி முதல் 18ந் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கு நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
 
இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், ஊழியா்கள் என பலரும் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முழு வேலைநிறுத்த போராட்டத்தின்போது அவரச கால அறுவை சிகிச்சைகள் வழக்கம்போல் நடைபெறும். வெளிநோயாளிகள், அவசர கால சிகிச்சை அல்லாத மருத்துவ பணிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களை சோ்ந்த மருத்துவ சங்கங்கள் ஆதரவு தொிவித்துள்ளன. இதனால் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் இன்னலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதாக தொிகிறது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி