நெடுஞ்சாலையில் சென்று

கொண்டிருந்த  காட்டு யானை ஒன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பகமூன பிரதான வீதியின் பகமூன தமனயதம்புர பகுதியில் வைத்து இந்தக் காட்டு யானை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
 
நேற்று (15) இரவு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பக்கமூன வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
 
உயிரிழந்தது 35 வயதான "ராஜா" என அழைக்கப்படும் காட்டு யானையாகும், இந்த யானை ஒரு கண் பார்வையற்றதாக நம்பப்படுகிறது.
 
இந்த காட்டு யானையால் எவரும் பாதிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
பொலிஸ் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பகமூனை பொலிஸில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த  யானையை T-56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாகமூனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் காரணமாக நேற்றிரவு பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஹபரணை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி