ஜனநாயக மக்கள் முன்னணி,

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி, கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் விதமாக வெளியேற்றபடுகிறார். 

என் உயிரினும் மேலான கண்டி மாவட்ட மக்களுக்கும் நமது கட்சிக்கும், இவர் செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாததாகும். 2010ம் வருடம் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எனக்கு எதிராக கடும் இனவாத வன்முறையில் ஈடுபட்ட அந்த  நபருடனேயே இந்த வேலுகுமார் இன்று சென்று சேர்ந்து கரங்கோர்த்து உள்ளார். வேலுகுமாரின் கட்சி தாவலின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறி உள்ளதாவது;   
 
என் தந்தையின் பிறந்த மற்றும் சொந்த ஊர் கண்டி. என் பாடசாலை கல்வியை நான் பெற்றதும் கண்டி. இந்த கண்டி மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை என்ற வரலாற்று தேவையை நிறைவேற்றவே நான், என் சொந்த உயிரையும் பணயம் வைத்து, கடும் போராட்டத்தின் மத்தியில் 2010ம் வருட தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டி இட்டேன். அந்த தேர்தலில் நான் தோல்வி அடையவில்லை. ஆனால், இனவாத வன்முறையால் எனது வெற்றி தடுத்து நிறுத்த பட்டது. இந்த 2010ம் வருடம் தேர்தலில் எனது தேர்தல் பிரசார முகாமையாளராக இந்த வேலு குமார் தொழில் செய்தார். 
 
நான் 2010ம் வருடம் கண்டியில் போட்டி இட்ட போது எனக்கு எதிராக நிகழ்த்த பட்ட வன்முறை கண்டி மாவட்ட தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி கண்டி தமிழ் மக்களின் கண்களை அடுத்து வரும் ஆண்டுகளில் திறந்தது. அதையடுத்து நடைபெற்ற தேர்தல்களில், எமது கட்சியின் சார்பில் கண்டியில், வேலு குமாரை போட்டி இட செய்து வெற்றி பெற வைத்தோம். கண்டி மாவட்ட வாழ் சகோதர தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மனதார முன் வந்து இவருக்கு ஒரு விருப்பு வாக்கை வழங்கி எமக்கு உதவினார்கள். 
 
தற்போது என்ன்ன நிகழ்ந்து உள்ளது? 2010ம் வருடம் தேர்தலில் எமக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட அந்த  நபருடனேயே இந்த வேலுகுமார் சென்று சேர்ந்து கரங்கோர்த்து உள்ளார். இதன் மூலம் இவரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு சென்ற கட்சி, தலைமை, வாக்களித்த மக்கள் என அனைவரின் முகங்களிலும் இவர் கரி பூசி உள்ளார். இவரது கட்சி தாவலின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. ரணில் விக்கிமசிங்க என்ற நொண்டி குதிரையுடன் சேர்ந்துள்ள கண்டி கழுதை.        
 
இலங்கை அரசியல் கட்சிகளின் வரலாற்றில் நிகழும்  இத்தகைய துரோகங்களில், இது முதலாவதும் அல்ல. கடைசியுமாக இருக்க போவதும் இல்லை. ஆனால், இவர் இன்று செய்துள்ள செயல், மிக பெரிய வரலாற்று துரோகம். இந்த வேலுகுமார், வரலாற்று குப்பை தொட்டியில் விழுந்து விட்ட குப்பை. இத்தகைய துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. மன்னிக்க கூடாது. எனது வரலாற்றில் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை. துரோகிகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.   
 
கண்டி மாவட்ட மக்கள் துணையுடன் இவருக்கு மறக்க முடியாத பாடத்தை நாம் கற்று தருவோம். இவருக்கு பாடம் கற்று தருவதுடன், கண்டி மாவட்டத்தின் மீதான எமது உரிமையையும் நாம் நிலை நாட்டுவோம். எமது அரசாங்கம் வெல்லும். எமது காலமும் வெல்லும். அரசாங்க பலத்துடன் கண்டியில் நாம் நிச்சயம் களம் இறங்குவோம். அப்போது வரலாறு திரும்பும்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி