ஜனாதிபதி வேட்பாளர்  விஜயதாச

ராஜபக்க்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு நிச்சயமற்றது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் விஜயதாச ராஜபக்க்ஷ, தனக்கு ஆதரவு கிடைத்தால் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஆதரவை இழந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் விஜேதாச ராஜபக்க்ஷவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன வேறொரு வேட்பாளருக்கு உதவுவதாக வதந்திகள் பரவி வருவதாக ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, தனக்கும் அவ்வாறான செய்திகள் வந்ததாக ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி