வவுனியா வடக்கில் அமைக்க அனுமதி பெற்ற  சர்ச்சைக்குரியதான சீனித் தொழிற்சாலையைத் தற்போது வவுனியா நகர

பிரதேச செயலாளர் பிரிவின் 'ஏ 9' பாதையோரத்துக்குச் சற்று நெருக்கமாகப் பிறிதொரு இடத்தில் அமைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் நயினாமடுப் பகுதியில் ஒரு சீனித் தொழிற்சாலை அமைக்க முதலீட்டு அமைச்சின் ஊடாக 200 ஹெக்டேயர் நிலத்துக்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு, அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சாத்தியவள ஆய்வுகள் இடம்பெற்றன.

இந்த ஆய்வில் நயினாமடுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மத்திய வகுப்புத் திட்டக் காணியின் அருகே ஆக இரு குளங்கள் மட்டுமே உள்ளமை கவனத்தில் எடுக்கப்பட்டது.

அத்தோடு அந்தப் பிரதேசம் வவுனியா நகரின் மத்தியில் இருந்து சுமார் 48 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதால், அங்கு சீனித்தொழிற்சாலை ஆரம்பிப்பதாயின் அப்பகுதியில் அதிக அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது என அறியவந்தது.

இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இளமருதங்குளம், சேமமடு மற்றும் மாளிகை உள்ளடக்கிய முக்கோண வடிவிலான பகுதியில் சீனித் தொழிற்சாலையை அமைக்க 200 ஹெக்டேயர் நிலம் வழங்குமாறு தொழிற்சாலை நிர்வாகத்தால் வவுனியா நகரப் பிரதேச செயலகத்துக்கு இப்போது எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீனித் தொழிற்சாலைத் தரப்பினால் பிரதேச செயலாளரிடம் கோரப்பட்டுள்ள நிலப் பகுதி வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள பிரதேசம் என்பதால் வவுனியா பிரதேச செயலாளர் அது தொடர்பில் வவுனியா மாவட்ட வனவளத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் என்று அறியவந்தது.

சீனித் தொழிற்சாலைத் தரப்பினரால் தற்போது கோரப்படும் பிரதேசம் 'ஏ 9' வீதியில் இருந்து ஆக 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

அத்தோடு சீனித் தொழிற்சாலையை அங்கு செயற்படுத்துவதற்கு வசதியாக அந்தப் பிரதேசத்தில் அருகருகே ஐந்து குளங்கள் காணப்படுகின்றமையும், வவுனியா நகரில் இருந்து ஆக 22 கிலோ மீற்றர் தூரத்தில் அந்தப் பிரதேசம் உள்ளமையும் முக்கிய விடயங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நன்றி-முரசு


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி