தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன் பரஸ்பரம்

ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;

”தீபத்திருநாள் நமக்கு அதிகமான அறிவாற்றலை வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிப்பதோடு, அறியாமை எனும் இருள் அகற்றி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்குக் கொண்டு செல்ல வழிவகுக்கும்.

இது சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுக்கான மிகுந்த நம்பிக்கையைக் கொண்டு வருவதோடு மக்களை பிரித்துவைக்கும் எல்லா வேறுபாடுகளையும் களைந்து அவர்கள் மத்தியில் சுபீட்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகிற இந்தத் தருணத்தில் அதர்மம் ஒழிந்து, ஆதிக்க உணர்வு மறைந்து, ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திடும் ஒரு பண்டிகையாக இப் பண்டிகை அமைய வேண்டும் என்று இன்நன்னாளில் வாழ்த்துகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி