மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் விடுத்த கோரிக்கைக்கு எதிராக சட்ட

நடவடிக்கை எடுக்கத் தயார் என மின்சாரப் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரையில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கூடுதல் கட்டணமாக அனைத்து மின் நுகர்வோருக்கும் 22% கட்டணத்தை அதிகரிக்குமாறும் அல்லது  ஒரு அலகு மின்சாரத்திற்கு அறவிடப்படும் கட்டணத்தை 8 ரூபாவால் அதிகரிக்குமாறும் மின்சார சபை, ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டோபர் 18ஆம் திகதி வரை கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி