இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு மற்றும் நாட்டில் பணவீக்க நிலைமைகளின் வளர்ச்சி பாரிய அதிகரிப்பை காட்டியது.

இதனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் 14.3 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி