அண்மையில் வடமராட்சி கிழக்கு தளையடி பொதுளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து
கொண்ட நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் மேலும் நால்வர் நேற்று(15) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

நேற்று(15) காலை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த நால்வரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து கைது செய்யப்பட்டனா்.

பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் கிளிநாச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

குறித்த நால்வரும் தலா 2 லட்சம் பெறுமதியான பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயலாளர் கிருபா கிரிதரன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆய்வாளர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் மற்றும் சாரதியுமே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி