எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தா்ப்பத்திலும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கும் கூட நாங்கள் தயார் என அவா் தொிவித்துள்ளாா்.

இதன்போது இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார்.

நாங்கள் இன்னும் அதனை பார்க்கவில்லை, தற்போது ஊடகம் சுதந்திரம் உள்ளது தானே என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி