நமது நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டுற்குப் பிறகு கிட்டத்தட்ட 40 இலட்சம்
பேர் அதாவது மொத்த சனத்தொகையில் 17 சதவீத மக்கள் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஒன்பது மாகாணங்களிலும் இந்நிலமை காணக்கூடியதாக உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

LIRNE asia நிறுவனம் வெளியிட்ட தரவு அறிக்கையை அமைய பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

40 இலட்சம் பேர் வறுமையில் வாடும் போது, ​நைட்ரஜன் உர மோசடி, மலக்கழிவு உர மோசடி போன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இம்மோசடிகளில் ஈடுபட்ட சகலரையும் தகுதி தராதரம் பாராமல் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது தெரிவித்தார்.
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி