களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றும் மாணவர்கள்
மற்றும் கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பரீட்சை நிலைகளுக்கு செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த நிலையங்களுக்கான வினாத்தாள்கள், மாற்று வீதிகள் ஊடாக கொண்டு செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து சிக்கல்களை சீர் செய்வதற்காக கடற்படையுடன் இணைந்து படகு சேவை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனர்த்த நிலைமைகளால் பரீட்சைக்கு தோற்ற இடையூறுகள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மாணவர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி