எட்டு கோடி ரூபாயிக்கும் அதிக பெறுமதியான தங்கத்தினை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த வெளிநாட்டு பிரஜையொருவர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 4.611 கிலோ கிராம் தங்கத்தினை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளார்.

இலங்கை சுங்கத்தின் இரத்தின, ஆபரண மதிப்பீட்டு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான குறித்த பிரான்ஸ் பிரஜை இதற்கு முன்னர் பல முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த முறை 24 மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருக்க வந்துள்ளதை அவதானத்தில் கொண்டு, அவரது பயணப்பை சோதனையிட்ட போதே இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளுக்கு பின்னர் குறித்த தங்கம் அரசுடமையாக்கப் பட்டதுடன் சந்தேகநபருக்கு 7 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையை அவர் செலுத்த முடியாமையை தொடர்ந்து நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்கடி சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய பின்னர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி