இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியவை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து எரிபொருளை
விநியோகித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நாளைய தினத்திற்குள் (04) அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், எரிபொருள் ஓடர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த வாரத்தில் எரிபொருள் கையிருப்பு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மதிப்பாய்வு செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

121 எரிபொருள் நிலையங்கள் மே மாதம் 27 முதல் 31 வரை எந்த ஓர்டரையும் செய்யவில்லை என்றும் மேலும் பல எரிபொருள் நிலையங்கள் குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்க போதுமான ஓர்டர்களை வழங்கவில்லை என்றும் முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறைந்தபட்சம் 50% எரிபொருள் கையிருப்பினை வைத்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் பரிசீலனைக்குப் பிறகு ரத்துச் செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி