ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று
ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் ​வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதம் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான புகையிரதபெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி