ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த பகுதியில் அமைந்த கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஆராய்ச்சி கப்பலான அதில் பயணிகள் இருந்துள்ளனர்.

பயணிகள் அனைவரும் கப்பலுக்குள் இருந்த நிலையில், கப்பல் திடீரென காற்றின் எதிர் திசையில் சரிந்து நீருக்குள் கவிழ்ந்துள்ளது.

25 பேர் வரை படுகாயம்
இந்த சம்பவத்தில் சிக்கி, 25 பேர் வரை காயம் அடைந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

10 பேருக்கு அந்த இடத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 5 நோயாளர் காவுகை வண்டி, ஒரு வான்வழி நோயாளர் காவுகை வண்டி, 3 சிகிச்சை குழுக்கள், ஒரு சிறப்பு அதிரடி படை, 3 துணை மருத்துவ பணி குழுக்கள் மற்றும் நோயாளிகளை சுமந்து செல்லும் வாகனம் ஒன்று ஆகியவை சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி