கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் கருத்தை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இவ்வாறாக பேசுவதன் மூலம் இனவாதி கருணாவை பின்பற்றி முஸ்லிம் இனவாதம் பேசி தமிழ் மக்களை உசுப்பேத்தி வாக்குகள் பெற கலையரசனும் முனைகின்றார் எனவும் ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்தபோது, இவ்வாறு பிழையான இனவாத கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்ட வரலாற்றில் 1960களில் தமிழ், முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது இரு தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டதுடன் கல்முனையில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக கல்முனைக்குடியில் வாழ்ந்த சுமார் பத்துக்கும் குறைவான தமிழ் குடும்பங்கள் தமது பாதுகாப்புக்காக தமது காணிகளை நல்ல விலைக்கு முஸ்லிம்களுக்கு விற்று விட்டுச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து 7ஆம் கொலணி, 13ஆம் கொலணி ஆகிய கிராமத்தில் தமிழ் மக்கள் சூழ வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமிழ் இனவாதிகளால் தாக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
அவர்களின் வீடுகள், காணிகள் இன்று வரை மீட்கப்படவில்லை.
“தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல“ - சர்ச்சையை கிளப்பிய இனவாத கருத்து
