leader eng

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் நேற்று முன்தினம் (30) நள்ளிரவு முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உத்தரவிடப்பட்ட கட்டளைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி செயலாளரினால் நேற்று (31) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற தோரணையில் அமுல்படுத்தியுள்ள இந்த சட்டங்களினால் ஏற்படும் ஆபத்து என்னவென்றால், இதனைத் தொடர்ந்து முற்றுமுழுதாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும் என கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை ஆக்கும் அதிகாரமும் ஜனாதியின் கைக்கே சென்றடையும் என கூறிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இதனை தாம் வலுவாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி