உள்வரும் பயணிகளுக்கு 10 நாட்கள் தடையுத்தரவு விதிக்கப்பட்டதன் பின்னர், நேற்றைய தினம் எட்டு விமானங்களினூடாக மொத்தம் 19 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கட்டார் ஏயர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் ஆறு இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனங்களினால் இயக்கப்படும் விமானங்களினூடாக இவர்கள் நேற்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக இலங்கை விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

"நாடு முழுவதும் விரைவான தடுப்பூசி திட்டத்தின் விளைவாக இந்த எண்ணிக்கை ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாக அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அதன் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு உள்வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியதன் மூலம், நேற்று மொத்தம் 567 பேர் நாட்டுக்கு வருகை தந்தனர்.

அதே நேரத்தில் வியட்நாம் மற்றும் இந்தியாவிலிருந்து பயணிகளின் வருகைக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

சுமார் 10 மாதங்கள் மூடப்பட்ட பின்னர் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இலங்கை மீண்டும் உள்நாட்டிற்கான சர்வதேச பயணங்களைத் தொடங்க விமான நிலையங்களை மீண்டும் திறந்தது.

அப்போதிருந்து மே 20 வரை சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க 13,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி