அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை விண்கல் தாக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அபோபிஸ் என்ற விண்கல் பூமிக்கு மிக அச்சுறுத்தல் மிக்க விண்கல் என நாசா வகைப்படுத்தி உள்ளது.

2029 மற்றும் 2036 ஆம் ஆண்டுகளில் இந்த விண்கல் பூமிக்கு அச்சுறுத்தலான வகையில் நெருங்கி வரும் என்று எதிர்வூகூறப்பட்ட நிலையில் அது தற்போது கைவிடபட்டுள்ளது. எனினும் 2068 ஆம் ஆண்டில் சிறிய அளவான அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வந்தது.

எனினும் இந்த விண்கல் பற்றி புதிய ஆய்வை மேற்கொண்டிருக்கும் நாசா அந்த அச்சுறுத்தல் நிலையையும் நிகாரித்துள்ளது. '2068 இல் மோதுவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பதோடு எமது கணிப்பின்படி அடுத்த 100 ஆண்டுகளில் எந்த மோதல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை' என்று நாசாவுக்காக பூமியின் அருகாமை பொருட்கள் பற்றி ஆய்வு நடத்தும் டேவிட் பர்னோச்சியா தெரிவித்துள்ளார்.

340 மீற்றர் அளவு கொண்ட அபோபிஸ் விண்கல் மூன்று கால்பந்து மைதானங்கள் அளவு பெரியதாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி