காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதிமறியல் போராட்டமொன்று, இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 98ஆம் கட்டை சந்தியில், வீதியை மறித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

உரியவர்களுக்கு பலமுறை அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் யானை வேலி அமைக்காமை குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோஷங்களை எழுப்பினர்.

இந்த வீதி மறியல் போராட்டத்தால், கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் வரை தடைப்பட்டிருந்தது.

எனினும், போராட்ட இடத்துக்கு பொலிஸ் உயரதிகாரி வருகை தந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விகாராதிபதியுடன் பேசியதற்கு இணங்கவும் உரிய அரச உயரதிகாரி ஒருவருடனான அலைபேசி உரையாடலையடுத்தும் மக்கள் வீதியை விட்டு சற்று விலகி, வாகனப் போக்குவரத்துக்கு இடம் கொடுத்தனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி