மன்னார் – மாந்தை மேற்கு கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரனின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலையைக் கண்டித்து மாந்தை மேற்கு பிரதேச செயலக ஊழியர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான 55 வயதான குறித்த கிராமசேவகரின் சடலம் கள்ளியடி – ஆத்திமோட்டை வீதியிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடமைகளை நிறைவு செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய கிராம உத்தியோகத்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது இறுதிக்கிரியைகள் கள்ளியடி இந்து மயானத்தில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி