வைரஸ் ஒழிப்பிற்கான தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்கிவைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்களை தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

COVID – 17 ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் – நலமாக இருப்போம் – டிஜிட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரம் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் சமமாக கவனத்திற்கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி