ஊரடங்கு அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்பு மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் உத்தரவிற்கு முரணாக செயற்பட்டமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவிலிருந்து ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டதன் பின்பு சிலர், பொலிஸையும் பொலிஸ் தடையையும் தவிர்த்து வெளியேறியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறி ஹோட்டல்களில் மற்றும் தங்குமிடங்களில் தங்கியிருக்கும் நபர்கள் சம்பந்தமாக தகவல்களைத் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறுகிறார்.

இதற்கிடையே, திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்பு கொழும்புக்கு வரும் போது அவர்கள் கொழும்பிலிருந்து வெளியேறிய விதம் குறித்து விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் இப்படிக் கூறினாலும், ஊரடங்குச் சட்டம் மேல்மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படாத நிலையிலும் அநேகமானோர் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியதை காணக் கூடியதாக இருந்தது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி