தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் பணி இராணுவத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையால், சுகாதாரப் பணியாளர்களின் தனிமைப்படுத்தலும் இராணுவத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான சுகாதார ஊழியர்களை இராணுவத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பக்கூடாது என  நாட்டின் முன்னணி தாதியர் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மற்ற நோயாளிகளுடன் தாதியர்கள் உள்ளிட்ட  சுகாதார ஊழியர்களை வைத்தியசாலையில் சேர்க்கும் செயற்பாடானது சுகாதார சேவைக்கு ஆபத்தை விளைவிக்கும் என அரச தாதியர் சங்கம் எச்சரிக்கிறது.

"ஏனென்றால் ஒரு சுகாதார பணியாளர் ஒரு வைத்தியராக, ஒரு தாதியராக செயற்படுகின்றார்.  இதைப் பற்றி அறிவு அவர்களுக்கு காணப்படுகின்றது.  அவர்களை ஏனைய நோயாளிகளுடன் ஒன்றிணைக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒரு விபத்தாக மாறும். அதிலிருந்து விடுபட அவர்களுக்குத் தெரியும்.  ஒருவருக்கு தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கவும் அவர்களுக்குத் தெரியும்”

ஆகவே, அவர்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென,  அரச தாதியர் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னபிரிய, கொரோனா தடுப்பு அதிகாரிகளிடம்  நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கேட்டுக் கொண்டார்.

இராணுவ தலையீடு இல்லை

சுகாதார அதிகாரிகளை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர் தலையிட வேண்டாமென தொழிற்சங்கத் தலைவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

samanR

"அவர்கள் அறையிலும் வீட்டிலும் தங்கி மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் அதை நன்றாக நிர்வகிக்கிறார்கள். இராணுவமோ, பொலிஸாரோ இதில் தலையிட வேண்டாம்" என சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.

 முதல் நெருக்கமானவர்கள் வீடுகளில்

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கான தனிமைப்படுத்தல்   நிலையங்களில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

"இனிமேல், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபரை வைத்தியசாலைக்குச் அழைத்துச் சென்றாலும், அவர்களது முதல் நெருக்கமானவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனால், அவர்கள் அதே வழியில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்," என இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் முன்னதாக, இராணுவம் தனிமைப்படுத்தலின் போது மக்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி