பொதுச் சேவைத் துறையில் காவல்துறை மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனமான பதிவாகியுள்ள அதே வேலை அதற்கு அடுத்தபடியாக ஊழல்வாதிகளாக நாடாளுமன்றம் உள்ளிட்ட அரச மற்றும் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் பதிவாகியுள்ளனர்.

பொதுச் சேவைத் துறையில் ஏறத்தாழ அரைவாசி ஊழல் செயற்பாடுகளுக்கு காவல்துறையே பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கையிலுள்ள நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பொதுத் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவல்துறை, உள்ளுராட்சி அரசு மற்றும் கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரமும் பொறுப்பும் காணப்படுவதே அதற்கு காரணமாக அமைந்துள்ளதாக வெரிட்ரே ரிசேர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மிகவும் பரவலாக, மிகவும் முறைப்பாடு செய்யப்பட்ட மற்றும் அழிவுகரமான ஊழல் மோசடிகள் காவல்துறையினர் மற்றும் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

corruption by Lanka

காவல்துறையினரே அதிகளவில் ஊழலில் ஈடுபடுவதாக 50 வீதமானவர்கள் கூறியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் ஊழலில் ஈடுபடுவதாக வெரி்ட்ரே நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ஊழல் செய்வதில் பொதுமக்களை தூண்டுவதில் உள்ளுராட்சி அரசாங்கம் முன்னணில் உள்ளதுடன், இரண்டாம் இடத்தில் தேசிய அரசாங்கத்திலுள்ள அதிகாரிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்குபற்றியவர்களில் 18 வீதமானவர்களின் கருத்துக்களின் படி இலங்கையின் நீதித்துறையும் சட்டத்துறையும் ஊழல்மிக்கவையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

safds


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி