இலங்கையுடன் தொடர்புடைய இரண்டு ஆவணங்கள் யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ள இலங்கையுடன் தொடர்புடைய ஆவணங்களில் ஒன்று 1873ஆம் ஆண்டு பாணந்துறை விவாதம் ஆகும்.

இது பாணந்துறையில் உள்ள ரங்கோத் விஹாரையில் பாதுகாக்கப்பட்ட நான்கு குறிப்பிடத்தக்க நூல்களின் தொகுப்பாகும்.

இந்த விவாதம் பௌத்த மற்றும் கிறிஸ்தவ தத்துவங்களுக்கு இடையிலான அமைதியான மற்றும் அறிவுசார் உரையாடலுக்காக சர்வதேச அளவில் அறியப்படுகிறது.

அத்துடன் இந்த நூல், சிறந்த வரலாற்று, கலாசார, ஆன்மீக மற்றும் அறிவுசார் மதிப்பைக் கொண்டுள்ளது.

இரண்டாவது ஆவணம் மும்மொழி கல்வெட்டு (திரிபாசா செல்லிபிஆகும்). இது தற்போது தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இந்த தனித்துவமான கலைப்பொருள் 1911இல் ஒரு பிரித்தானிய பொறியியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த படிகம், சீன அட்மிரல் ஜெங் ஹேவால என்பரால் நிறுவப்பட்டது. மூன்று வெவ்வேறு பகுதிகள் மற்றும் கலாசாரங்களைக் குறிக்கும் சீன, தமிழ் மற்றும் பாரசீக மொழிகளைக் கொண்ட ஒரே மும்மொழி கல்வெட்டு இதுவாக அமைந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி