மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட இலங்கையர்கள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு இலங்கை பதிலளித்துள்ளது.

“இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான இங்கிலாந்து தடைகள்" என்ற தலைப்பில் இங்கிலாந்து, வெளிநாட்டு கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) வெளியிட்ட மார்ச் 24, 2025 திகதியிட்ட செய்திக்குறிப்புக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளபடி, இங்கிலாந்து அரசாங்கம் நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகள்.

அந்தவகையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் நிகழ்ந்த எந்தவொரு மனித உரிமை மீறல்களும் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இது இங்கிலாந்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட "ஒருதலைப்பட்ச நடவடிக்கை" என்பதை வலியுறுத்த விரும்புவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு உதவுவதில்லை,  என்பதோடு மாறாக சிக்கலான நிலைக்குள்ளேயே உட்படுத்துகின்றன.

மேலும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில், இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும். என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி