தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து தற்போது குணச்சித்திர நடிகராக படங்களில்

நடித்து வருபவர் பாரதிராஜா. அவரது மகன் மனோஜ் பாரதிராஜா சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம் அடைந்து இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. கடந்த வாரம் தான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு ஓய்வில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்து இருக்கிறார்.

48 வயதாகும் மனோஜுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் இது அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை 4 மணிக்கு மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். 48 வயதாகும் அவரது திடீர் மரணம் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இளம் பருவத்தில் இருந்தே அப்பா பாரதிராஜா உடன் ஷூட்டிங் பல முறை சென்றதால் அவருக்கு அப்போதே சினிமா மீது அதிகம் ஆர்வம் வந்துவிட்டதாம். கல்லூரி செல்லும் காலத்தில் 'நான் படிக்க போக மாட்டேன், உங்களுடனே வந்துவிடுகிறேன்' என அப்பாவிடம் அடம்பிடித்தாராம்.

இருப்பினும் பாரதிராஜா அவரை கண்டித்து கல்லூரிக்கு அனுப்பி வைத்து பட்டப்படிப்பை முடிக்க வைத்தாராம்.

அதன் பிறகு துணை இயக்குனராக அப்பாவிடமே சேர்த்துக்கொள்ளலாம் என மனோஜ் நினைக்க, பாரதிராஜா வேண்டாம் என கூறிவிட்டாராம். அப்பா - மகன் உறவு வேலையில் காட்டக்கூடாது என சொன்னாராம்.

மணிரத்னம் அசிஸ்டன்ட்

அதன் பிறகு 1993ல் இயக்குனர் மணிரத்னத்திடம் பேசி மனோஜை அவரது அசிஸ்டன்ட் ஆக சேர்த்துவிட்டாராம் பாரதிராஜா. பம்பாய் படத்தில் தான் மனோஜ் முதல்முறையாக துணை இயக்குனராக பணியாற்றினார்.

அதன் பிறகு சொந்த ஸ்கிரிப்ட் உடன் வந்த மனோஜ் தான் படம் இயக்க போவதாக அப்பாவிடம் கூறி இருக்கிறார்.

கட்டாயப்படுத்தி நடிகர் ஆக்கிய பாரதிராஜா

படம் இயக்குவது எல்லாம் ரொம்ப கஷ்டம், நீ துணை இயக்குனராக இருந்தே பார்த்திருப்பாய். அதனால் நீ நடிகன் ஆகிவிடு.

நான் நடிகன் ஆக வேண்டும் என்று தான் இங்கு வந்தேன். என்னால் முடியவில்லை. அதனால் என் நிழல் ஆன நீயாவது ஹீரோ ஆக வேண்டும் என சொன்ன பாரதிராஜா அவரை காட்டாயப்படுத்தி படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

அதனால் இரண்டு பேருக்கும் நடுவில் சில காலம் cold war தான் நடந்திருக்கிறது.

நடிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி இரண்டு வருடங்கள் தியேட்டர் ஆர்ட்ஸ் படிக்க வைத்தார் பாரதிராஜா.

அங்கிருந்து திரும்பி வந்த பிறகு தான் தாஜ்மஹால் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. கேமரா முன்பு நடிக்க தொடங்கியபோது முதல் 10 நாட்கள் அவ்வளவு பதற்றமாக இருந்தது, சரியாக நடிக்க தெரியாதா என சொல்லி பாரதிராஜாவே அவரை திட்டுவாராம். 

என்னடா பழி வாங்குறியா

அதன் பிறகு மனோஜ் இயக்கிய ஒரு படத்தில்பாரதிராஜாவை நடிக்க வைத்திருக்கிறார். அப்போது அவருக்கு மனோஜ் நடிப்பு சொல்லிக்கொடுத்தாராம்.

"என்னடா பழி வாங்குறியா" என பாரதிராஜா அப்போது அவரிடம் கேட்டாராம். அந்த காலம் வேறு, இந்த காலம் வேறு என தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றபடி அவரை நடிக்க வைத்தாராம் மனோஜ்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி