இலங்கையானது, தீவிரவாதத்தை முழுமையாக வெற்றி கொண்ட முதல் நாடாக இருக்கிறது.
இருப்பினும், மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எங்கள் போர் வீரர்களை இலக்காகக் கொண்டு, LTTEஇன் கொடுமைகளை நிதிப்படுத்தி நியாயப்படுத்தியவர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கின்றன.
சமீபத்திய இங்கிலாந்து தடைகள் மனித உரிமைகளைப் பற்றியவை அல்ல - இவை LTTE ஆதரவு வாதிகளின் தொடர்ச்சியான வலியுறுத்தலின் விளைவாகும். அமைதியைக் கொண்டுவந்தவர்கள் மீது வெளிநாட்டு அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கும்படி மாற்றுகின்றன. இது நீதி அல்ல; சில மேற்கத்திய அரசியல்வாதிகள் வாதிடும் பணத்தின் நன்மைகளை அனுபவிக்கின்றனர், எங்கள் நாட்டின் நல்லிணக்கத்தைப் பிரச்சனைக்குள்ளாக்குகின்றனர்.
வடக்கு மற்றும் தெற்கிலிருக்கும் மக்கள், இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளிலிருந்து வந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தடைகள் எங்கள் படைகளின் மனோபலத்தைக் குறைக்கும். மேலும், நாம் இப்பொழுது அவர்களுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால், வேறு ஒரு நெருக்கடி ஏற்படும்போது, அவர்கள் போரிட தைரியமின்றி இருப்பார்கள்.
இந்தத் தடைகளுக்குப் பின்னிருப்பவர்கள் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை - அவர்கள் மேலும் பிரச்சனைகளை உருவாக்கி, நல்லிணக்கத்தைப் பாதிப்படையச் செய்கிறார்கள்.
அவர்களின் உண்மையான இலக்கு, சாதிக்கப்பட்ட முன்னேற்றத்தைக் குலைப்பதேயாகும். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் சமூகங்கள் இப்பொழுது தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் தெளிவான பாதையைக் கொண்டுள்ளனர். சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைத் தடுக்க யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
மீண்டும் வலியுறுத்துகிறேன் – நடந்த போர், தீவிரவாதத்திற்கு எதிராக இருந்ததே தவிர எந்தவொரு இனச் சமூகத்திற்கு எதிராக இருக்கவில்லை. சில தமிழ் அரசியல்வாதிகள், சில அமைப்புகளின் மூலம் சமூகங்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்துவதற்கு பலன் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ் சமூகம் புரிந்துகொள்ளக் கோருகிறேன். அவர்களின் சமூக பிரிவுக்கான எஜெண்டாவைப் பின்பற்ற வேண்டாம்.
@அநுராகுமார, @விஜித ஹேரத் அவர்களே, உங்கள் அரசாங்கம் எப்பொழுதும் எங்கள் இராணுவத்தின் தியாகங்களைக் குறைத்து மதிப்பவர்களின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்ததாகும். இப்பொழுது, இலங்கைக்கு அமைதியைப் பெற்றுக் கொடுத்தவர்கள் மீது வெளிநாட்டு சக்திகள் தாக்குதல் நடத்தும்பொழுது நீங்கள் அவர்களைப் பாதுகாப்பீர்களா? அல்லது மௌனமாக இருப்பீர்களா? நாங்கள் எப்பொழுதும் எங்கள் போர் வீரர்களைப் பாதுகாப்போம் - இப்பொழுதும் எப்பொழுதும். அவர்களின் தியாகம் எங்கள் அமைதியைப் பாதுகாத்தது. மேலும், யாரும் அவர்களின் மரபை மதிக்காமல் இருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.