கொழும்பு துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில்
தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதாக, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
துறைமுக வளாகத்திற்குள் ஏற்கனவே 3,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அகற்றப்படாமல் இருப்பதாக, சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா தெரிவித்தார்.
எதிர்பார்த்தபடி கொள்கலன் அனுமதிப் பணிகள் மேற்கொள்ளப்படாததே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
கடந்த காலங்களில், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றிய சுங்க அதிகாரிகள் கொள்கலன்களை அகற்றுவதில் மிகவும் திறமையானவர்களாக இருந்துள்ளனர். தற்போது பணியாற்றும் சுங்க அதிகாரிகளும் அதே முறைகளைப் பின்பற்றினால், தற்போதுள்ள நெரிசலைக் குறைக்க முடியும் என்று, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுல மேலும் தெரிவித்தார்.