இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாதச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும் அவருக்கு 1,500 ரூபாய் அபராதம் விதித்து, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன தீர்ப்பளித்தார்.
ஜூலை 16, 2016 அன்று, கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், "இஸ்லாம் ஒரு புற்றுநோய். அது ஒழிக்கப்பட வேண்டும்" என்று, ஞானசார தேரர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர், இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, தண்டனைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 291இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.