2025 புத்தாண்டை முன்னிட்டு காலி முகத்துவாரத்தை அண்மித்த பகுதிகளில் நாளை (31)

அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெருந்தொகையான மக்களும் வாகனங்களும் நாளை காலி முகத்துவார பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்ட புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அதற்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலி மத்திய வீதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது எனவும், அனைத்து வாகனங்களும் பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த போக்குவரத்து திட்டம் கீழே,

கட்டணத்துடன் கூடிய தனியார் வாகன நிறுத்துமிடங்கள்

* புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பழைய மெனிங் சந்தை வளாக வாகன நிறுத்துமிடம்.

* கோட்டை- விமலதர்ம சூரிய கடிகார கோபுரம் அருகில் - சார்மன்ஸ் வாகன நிறுத்துமிடம்.  ராசிக் ஃபரித் மாவத்தை - ஹேமாஸ் வாகன நிறுத்துமிடம்.

* டி.ஆர். விஜேவர்தன மாவத்தை - லேக் ஹவுஸ் வாகன நிறுத்துமிடம்.

கொம்பெனித்தெரு - யூனியன் பிளேஸ் டோசன் தெரு சந்தி ஹெக்ஷெஷ் டவர் வாகன நிறுத்துமிடம்.

* மருதானை-காமினி சுற்றுவட்டத்திற்கு அருகில் St Clement வாகன நிறுத்துமிடம்.

பின்வரும் இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வீதியின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இலவசமாக வாகனங்களை நிறுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

* கோட்டை பொலிஸ் பிரிவின் பால தக்ஷ மாவத்தை  MOD வாகன நிறுத்துமிடம்.

* கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடலோர வீதி

* கோட்டை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவின் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை

* கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் பார்சன்ஸ் வீதி, வெளியேறும் பாதை மட்டும்.

* கோட்டை பொலிஸ் பிரிவின் லேடிங் பெஸ்டியன் மாவத்தை.

* கோட்டை பொலிஸ் பிரிவின் பிரிஸ்டல் தெரு,

* கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள டியூக் தெரு

* காலி வீதி வெள்ளவத்தை சவோய்க்கு அருகில் இருந்து காலி வீதி பகத்தலே வீதி சந்தி வரை வாகன நிறுத்துமிடங்களில் (Parkaing Bays) மட்டும்

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை தாமரை தடாகம் சுற்றுவட்டத்தில் இருந்து நூலகச் சுற்றுவட்டத்தை நோக்கி நுழையும் பாதை (இடது) .

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின்  ரீட் மாவத்தை சந்தியிலிருந்து ரீட் மாவத்தை, தர்ஸ்டன் சந்தி வரையான வீதியின் வலது பக்கம்.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் சுதந்திர வீதி, சுதந்திரச் சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரையான வீதியின் வலது பக்கம்.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் மெட்லண்ட் பிளேஸ்.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் மன்றக் கல்லூரி வீதி.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி