இந்திய அரசாங்கத்தின் மானிய
திட்டத்தின் கீழ் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு 22 டீசல் எஞ்ஜின்களைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகச் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
சொற்ப காலம் பயன்படுத்தப்பட்ட M.10 என்ஜின் மாதிரியின் மேம்படுத்தப்பட்ட 20 என்ஜின்களை இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கு வழங்க இந்திய ரயில்வே தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.