10ஆவது பாராளுமன்றத்தின்
புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி அசோக ரன்வலவின் கல்வித் தகுதிகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் அவர் செயற்படும் விதம் குறித்த விமர்சனமே அதற்குக் காரணம்.
கலாநிதி நிர்மல் தேவசிறியும் தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு, அசோக ரன்வலவின் கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால், சபாநாயகர் முன்வைத்துள்ள தகவல்கள் பொய்யானால் அசோக ரன்வல அந்த பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.