(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடி - நாவலடி பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை (4) நாவலடி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
நாவலடி பிரதான வீதியாக பொலன்னறுவை பகுதியை நோக்கிப் பயணம் செய்த ரிப்பர் எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஓமனியாமடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி உட்பட அதில் பயணம் செய்த மூவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியான நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய ரிப்பர் சாரதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.