கடந்த அரசாங்கத்தினால்
வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் பட்டியல் இன்று (04) மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியம் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.