அரச நிறுவனங்களில்
பயன்படுத்தப்படும் சில சொகுசு வாகனங்களின் பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவுகளைக் கருத்தில் கொண்டு, அத்தகைய சொகுசு வாகனங்களை அகற்றுவது பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்குமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களிலும் தற்போதுள்ள வாகனங்கள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 1800சிசிக்கு மேல் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2300சிசிக்கு மேல் டீசல் எஞ்சின் திறன் கொண்ட வாகனங்கள் (டபிள் கெப், சிங்கிள் கெப், வேன்கள், பஸ்கள் நீங்கலாக) சுங்க வரிக்கு உட்பட்ட வாகனங்களுக்கான கொள்முதல் நடைமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
இது தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.