பாராளுமன்றத்தில் உள்ள
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வளாகத்தில் வைத்து இன்று (03) தான் தாக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போதே, ஒரு நபர் தன்னை அங்கு வைத்து தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
"நான் 2:30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்குச் சென்றேன். எனது நேரத்தை எப்படி ஒதுக்குவது என்று கேட்கவே சென்றேன். இன்று எனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. நாளைக்கு நேரம் இருக்கிறதா இல்லையா என்று கேட்கச் சென்றேன். அங்கு அதிகாரிகள் இருந்தார்கள். அவர்கள் என்னை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றனர். நாளை மாலை 4 மணிக்கு நேரம் தரலாம் என்றார்கள்.
"அந்த ஏற்பாட்டை எப்படி செய்வீர்கள் என்று கேட்டேன். பிறகு சுஜித் என்ற நபரையும் மற்றொரு நபரையும் போய் சந்தித்து பேசுங்கள் அவர்கள் முடிவு செய்வார்கள் என்றனர்
“அங்கே சென்றபோது சுஜித் என்ற நபர் என்னை அடித்தார். அவருக்கு திருப்பி அடிக்க எனக்கு விருப்பமில்லை.. அவருக்கு என் அப்பா வயசு. அதனால் நான் அடிக்கவில்லை என்றார்.
நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின்போது, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அர்ச்சுனா எம்.பி அமர்ந்திருந்த சம்பவம், பின்னர் சர்ச்சைக்குரியதாக மாறியது.
எவ்வாறாயினும், கடந்த 25ஆம் திகதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெற்ற செயலமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கோரினார்.