(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ்
பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
 
இந்தச் சம்பவம் இன்று (3) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.
 
பிரதான வீதியால் பயணித்த இரு ஆட்டோக்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
IMG 20241203 WA0215
 
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
விபத்து நடந்த இடத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி