தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்

முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே வெளியானதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இந்த வினாத்தாளுக்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் பரீட்சையை மீண்டும் நடத்துவது பொருத்தமானதல்ல என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
 
புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 11ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி