கல்கிஸ்ஸை பிரிவு குற்றப்
புலனாய்வுப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தினுக நுவன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் தினுக நுவன் 2009 ஆம் ஆண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையில் இணைந்து பின்னர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்தார்.
இந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'கிளப் வசந்த' கொலைச் சந்தேக நபர்கள், 'ஹன்வெல்ல பஸ் வர்த்தகர்' கொலைச் சந்தேக நபர்கள் உட்பட பல குற்றச் செயல்களின் சந்தேக நபர்களை கைது செய்யப் பணியாற்றிய திறமையான அதிகாரியாக அறியப்படுகிறார்.
தினுக நுவன் இதற்கு முன்னர் அத்துருகிரிய பொலிஸ் குற்றப் பிரிவிலும் மேல் மாகாணத்தின் தென் மாவட்ட குற்றப் பிரிவிலும் பணிபுரிந்துள்ளார்.