எரிவாயு விலை திருத்தம் தொடர்பில்
இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என லாஃப் கேஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது 22,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
தற்போது அங்கு எரிவாயு இறக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த எரிவாயுவை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, மற்றுமொரு எரிவாயு கப்பல் அடுத்த வாரம் தீவை வந்தடைய உள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதனால் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.