(பாறுக் ஷிஹான்)
மாவடிப்பள்ளி அனர்த்தம்
இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்துடன் காரைதீவு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
அப்பகுதியில் வெள்ள நிலை ஏற்பட்டபோது சுமார் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும் மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் சுமார் 150 மீற்றர் தூரத்தில் இயந்திரத்துடன் இணைப்பை துண்டிக்கக் கூடிய வகையில் பெட்டி வேறாக சென்றிருக்க கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.