உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களைக் கோரி தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் நம்பப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பாக விவாதிக்கப்படவில்லை என்றும், அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதில் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
ஏனெனில், வேட்பு மனுப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் இறந்து விட்டார்கள் என்பதுடன் மேலும் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றமை, கட்சி மாறி, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை போன்றவை தொடர்பில் கவனஞ் செலுத்தப்பட்டே புதிய வேட்புமனுக்களைக் கோருவது தொடர்பில் சாதக நிலைமை காணப்படுகிறது.
இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்டபோது, கடந்த நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.