எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய
மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்வதற்கு தலைமைத்துவ சபையொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராக இருக்கும் நிலையிலேயே தலைமைத்துவ சபையை நியமித்து தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுஙதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த முன்மொழிவு அதிகாரப்பூர்வமற்ற மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த யோசனையை முன்வைத்த சிரேஷ்ட தலைவர்கள் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு பொருத்தமான சிரேஷ்ட பிரபல தலைவர்கள் பலர் இருப்பதாகவும், அதற்காக அவர்கள் நியமிக்கப்பட வேண்டுமெனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.