நிலவும் காலநிலை காரணமாக
தீவின் பல பகுதிகளில் காற்றின் தரம் சற்று சாதகமற்ற நிலைக்கு குறையலாம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தர சுட்டெண் பெறுமதி 130 ஆகவும் கொழும்பு நகரின் காற்றின் தர சுட்டெண் பெறுமதி 120 ஆகவும் பதிவாகியுள்ளது.
நுவரெலியா மற்றும் பதுளை நகரங்களில் காற்றின் தர சுட்டெண் மிதமான மட்டத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று குறியீட்டு மதிப்பு பொதுவாக 50க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
இந்த நிலையில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் அஜித் குணவர்தன பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றார்