வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
கிண்ணியா, மூதூர் மக்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் 2,250 கிலோகிராம்
கோதுமை மாவை கிண்ணியா, மூதூர் பிரதேச செயலகங்களுக்கு வழங்கி வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலகத்தின் நிவாரண பணிகளுக்கு உதவும் முகமாக ஒரு தொகை கோதுமை மா இன்று பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, ஏனைய பிரதேச செயலகங்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.இதற்கு மேலதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை மாவட்டம் முழுவதும் எனது பிரதிநிதிகள் மூலம் முன்னெடுத்துள்ளேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் நிவாரண பணிகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் கூறுவது போன்று அனர்த்த நிலைமைகளின் போது அரசின் செயற்பாடுகள் மந்த கதியிலயே நடைபெறுகின்றன. எனவே ஜனாதிபதி இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.